மாருதி மழலைகளிள் 2025ம் ஆண்டிற்கான மழலைகள் அங்காடி .23.07.2025 அன்று வியாழக்கிழமை வந்தாறுமூலை மாருதி திறந்த வெளியில் கோலாகலமாக இடம் பெற்றது. ,இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக செங்கலடி பிரதேச செயலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஐ.நபிலா கலந்து சிறப்பித்திருந்தார். பிரதமஅதிதிக்கு பூச்செண்டுகள் வழங்கி வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் மழலைகள் சந்தை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சிறார்கள் தங்களது பெற்றோருடன் ,இணைந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், பசுமை விளைபொருட்கள் மற்றும் சிறிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி விற்பனை செய்து மகிழ்ந்தனர்.
பாடசாலை வளாகத்தில் சிறுகடைகள் அமைக்கப்பட்டு சிறுவர்களின் வியாபாரத் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாணவர்களும் தனித்தனியாக ,இந் நிகழ்வில் ஈடுபட்டனர். சிறுவர்கள் விற்பனை செய்யும் போது அவர்கள் எளிய கணக்கு அறிவும், பேசும் திறனும் மேம்பட்டது என பெற்றோர்கள் பெருமிதத்துடன் ,இந்நிகழ்வினை வரவேற்றனர்;.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஐ.நபிலா தனதுரையில் குறிப்பிடும்போது
இச்சந்தை நிகழ்வு குழந்தைகளுக்கு பொறுப்புணர்வு, பொருளாதாரக் கல்வி, மற்றும் சமூக உறவுகளை வளர்க்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்' எனக் குறிப்பிட்டிருந்தார்
மழலைகளின் விழிப்புணர்வும், பெற்றோர்களின் ஆதரவும் நிகழ்வை வெற்றிகரமாக மாற்றியிருந்தமை மகிழ்ச்சியளித்தது.




























