மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு தெளிவூட்டும் வேலைத்திட்டம்-2025.07.01

















மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரீ.ஜெய்தனன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இடம் பெற்றது.

தொகை மதிப்பு மற்று புள்ளிவிபர திணைக்களம் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அணுசரனையில் தொகை மதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவி தொகை மதிப்பு ஆணையாளர்களை  தெளிவூட்டும் நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது விவசாய நடவடிக்கைகளுக்கான  விவசாய புள்ளிவிவரங்கள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.

மேலும் விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் சதவீதம், விவசாய வீட்டு கூறுகளின் எண்ணிக்கை, விவசாயிகள் குழுக்களில் எண்ணிக்கை மற்றும் சதவீதம், நிலப் பயன்பாடு, பருவகால பயிர்கள், கால்நடை வளர்ப்பு போண்ற பல விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய விடயதானங்கள் பொறுப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவருபரஞ்ஜினி முகுந்தன், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்கள பணிப்பாளர்களான எச்.டபிள்யு.எம் ஜயவீர, எஸ்.எச். மன்சூர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர்  திருமதி காயத்திரி ரமேஸ், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர். உதவி பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.