மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு-2025.07.09

























சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை தொடர்பாக அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிஸா றியாஸ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (9) இடம் பெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து இவ் விழிப்புணர்வு செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தனர் இந் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த  சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான ஆர்.செகநாதன், வை.எம். இம் றியாஸ், ரீ.திவ்யா, திருமதி ஜீ.ரேவதி ஆகியோரினால் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இதன் போது 1998 ஆண்டின் 50 ஆம் இலக்க தோய சிறுவர் பாதுகாப்பு சட்டம் தொடர்பான விளக்கங்கள், சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமைகள், சிறுவர்களின் உளநல மேம்பாடு, முறையற்ற  சமூக வலைத்தள பாவனை, சமூக விழிப்புணர்வுடன்  செயல்படுதல், சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் தெளிவூட்டல்கள்  வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் வலயக்கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஊடகவியளார்கள் துறைசார் நிபுணர்கள்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரி  சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் ஏ.பிரபாகர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.