மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசகரும மொழி தின நிகழ்வுகள்- 2025.07.01


 








 

நீதி மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினுடாக நடைமுறைப்படுத்தப்படும் முதல் நாள்  நிகழ்வுகள் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இடம் பெற்றது.

 நாடலளாவிய ரீதியில் இடம் பெறும் நிகழ்வின் ஒர் அங்கமாக மட்டக்களப்பில் தேசிய ஒருமைப் பாட்டு மேம்பாட்டு உதவியாளர் வி.சந்திரகுமார் தலைமையில்  பெற்றது.


1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் (IV) அத்தியாயத்தில் கூறிப்பிட்டதற்கு அமைவாக வருடம் தோரறும் அரசகரும மொழிகள் தினமானது    யூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து ஐந்தாம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்றது.

அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அலுவலக  கடமையில் ஈடுபடும் போது அரச கரும மொழிக் கொள்கையின் முக்கியத்துவம் மற்றும் மொழி உரிமை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.

இந் நிகழ்வின் வளவாளார்களாக தேசிய மொழிகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. பிரதிஸ்கரன், உளசமூக மாவட்ட இணைப்பாளர் ஏ.பிரபாகரன், பதவி நிலை உதவியாளர் கே.எம். ரிழா, கிழக்கு மாகாண மொழிகள் மத்திய நிலைய  அதிகாரி திருமதி. சுபாசினி ரகுரதன் என பலர் கலந்து கொண்டனர்.