இஸ்ரேலில் பணிபுரியும் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

 


 

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிபுரியும் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற நிறுவனத்தின் போக்குவரத்து பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பேருந்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் ஜன்னல்களை உடைத்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அசம்பாவிதங்கள் எவையும் பதிவு செய்யப்படாத நிலையில், ஜன்னலில் இருந்து குதிக்கும் போது விழுந்து முழங்காலில் காயமடைந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்து தீப்பிடித்து சில நிமிடங்களில் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.