கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டிகள் இவ் வருடம் திருகோணமலை மாவட்டத்தின் உவர் மலை விவேகானந்தா பாடசாலையில் மாகாண மட்ட கரம் போட்டியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வலயத்தில் மட்டக்களப்பு இந்துகல்லூரி கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டியில் சாம்பியனாக வெற்றியடைந்த 20வயது பிரிவு ஆண்கள் அணி மாகாண மட்ட போட்டிகளில் பங்குபற்றி சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று 1ம் இடத்தை பெற்று கொண்டனர்.
20 வயது பிரிவு ஆண்கள் அணி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலை தொடர்ச்சியாக இரண்டு தடவை சாம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது.
இவற்றுக்கான பயிற்சிகளை பெற்ற மாணவர்கள் அவர்களுக்கான திட்டமிட்டு பயிற்சி வழங்கிய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் கோ.ரிஷாந்தன். அத்தோடு சகல உதவிகளை வழங்கிய பாடசாலை அதிபர் , உடற்கல்வி பொறுப்பாசிரியர் மற்றும் ஆசிரியர்களை புதிய கோட்டமுனை விளையாட்டு கழகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
ந.குகதர்சன்





