கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டிகள் இவ்வருடம் திருகோணமலை மாவட்டத்தின் உவர் மலை விவேகானந்தா பாடசாலையில் மாகாண மட்ட கரம் போட்டியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வலயத்தில் மாவிலங்குதுறை விக்னேஸ்வரா பாடசாலை கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டியில் சாம்பியனாக வெற்றியடைந்த 17வயது பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி.
ஆண்கள் அணி சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று 1ம் இடத்தை பெற்று கொண்டனர்.
அதே போன்று பெண்கள் சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி போட்டியில் தோல்வியடைந்து 2ம் இடத்தை பெற்றுக் கொண்டனர். இருப்பினும் கடந்த வருடம் 3ம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வலயத்தின் பின் தங்கிய பாடசாலைகளில் ஒன்றான இந்த பாடசாலை தேசிய பாடசாலைகளை வீழ்த்தி வெற்றி கொண்டமை சிறப்பானது.
சிறந்த அனுபவங்களையும் ஆளுமையுடைய பாடசாலை பயிற்றுவிப்பாளர் மூலம் கரம் உபகரணங்களை பல வழிகளில் உதவியாக பெற்று கொடுத்து அவர்களுக்கான திட்டமிட்டு பயிற்சி வழங்கிய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் கோ.சாத்வீகன், உடற்கல்வி ஆசிரியர் திருமதி.வி.வளர்மதி அம்மணி அவர்களுக்கும் இவற்றுக்கான பயிற்சிகளை பெற்ற மாணவர்களும் சகல உதவிகளை வழங்கிய பாடசாலை அதிபர் , ஆசிரியர்களை பாடசாலை சமூகம் ரீதியாக சார்பாக வாழ்த்துகின்றோம்.
ந.குகதர்சன்





