ஏமன் நாட்டில் கொலை வழக்கில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017இல் நடந்த கொலை வழக்கில் நிமிஷாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. நிமிஷாவை காப்பாற்றுவதற்கு அவரது தாய் சட்டப் போராட்டம், நிதி திரட்டல் போன்றவற்றை மேற்கொண்டு வரும் நிலையில், 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப் போவதாக அந்நாட்டின் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் நிமிஷாவை காப்பாற்றுவதற்கான வழிகளை அவரது தரப்பு ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.