இன்று (11.07.2025) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

 


ஹிரண காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 
 
இன்று (11) அதிகாலை அடையாளம் தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 
 
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளார். 
 
துப்பாக்கிதாரி வீட்டின் யன்னலை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.