செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இன்றும் 11 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய, இன்றைய தினம் அரை நாள் அகழ்வு பணிகள் இடம்பெறும் எனப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின்போது, புதிதாக மூன்று மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, தற்போது மொத்தமாக 45
என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 42 என்புகூடுகள் முழுமையாக
அகழ்ந்தெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, செய்மதி தொழில்நுட்பத்தின்
ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட புதிய பகுதியிலிருந்து, மண்டையோடு ஒன்றும்
மீட்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன்
தெரிவித்தார்.
அதேநேரம், நேற்று முன்தினம்
அடையாளப்படுத்தப்பட்ட மூன்று சிறார்களின் எச்சங்களில் ஒருவரின் எச்சங்களில்
ஆணி அடிக்கப்பட்டதையொத்த அடையாளங்கள் காணப்படுகின்றமை
அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.