இதுவரையில் மொத்தமாக 104 என்புக்கூட்டுத் தொகுதிகள் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டப்பணிகள் 23 ஆவது நாளாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.

அதன்போது, 3 மனித  என்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் மொத்தமாக 104 என்புக்கூட்டுத்  தொகுதிகள் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில், 97 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இன்றைய தினம் ஒரு என்புக்கூட்டுத் தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சித்துப்பாத்தி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் நாளையும் தொடரவுள்ளன.