போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 29 வரை 1,22,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

 


போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக நடப்பாண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 29 வரை 1,22,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் மேற்பார்வையின் கீழ், இலங்கை பொலிஸார் மற்றும் முப்படைகளின் சிறப்பு தலையீட்டின் மூலம் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, நேற்று (29) மட்டும், இலங்கை பொலிஸ், விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல சிறப்பு நடவடிக்கைகளில் 25,111 நபர்கள், 10,128 வாகனங்கள் மற்றும் 7,734 உந்துருளிகள் பரிசோதிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் இலங்கை பொலிஸ், விடே அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த 6,695 பேர் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வந்து விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள வலையமைப்புகளைக் கண்டறிந்து, போதைப்பொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கும், போதைப்பொருள் பாவனையாளர்களின் மறுவாழ்வை முறைப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.