இலங்கை தமிழரசு கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு
மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் களின் சத்திய பிரமாண விழா
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்
தெரிவு
செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான உள்ளூராட்சி மன்ற உரிமைகளும் அதன்
பொறுப்புக்களும் பொது மக்களுக்கான கடமைகளை முன்னெடுத்தலும் தொடர்பான விளக்க
உரைகள் இங்கு கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் கருத்துக்கள்
வழங்கி வைக்கப்பட்டதன்
பின்பு உள்ளூராட்சி சபைகளுக்குரியசத்திய பிரமாண நிகழ்வும் கட்சியின் சத்திய பிரமாண நிகழ்வும் இடம்பெற்றதன் பின்பு
வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது
இலங்கை
தமிழரசு கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு
மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி சபைகளிலும்வெற்றி பெற்ற 86 வேட்பாளர்களின்
சத்திய பிரமாண விழா இன்று அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு
மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீ நேசன்
வைத்தியர் இ ஸ்ரீநாத் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள்என பலரும் கலந்து
கொண்டனர்.
வரதன்