ஈரானை தாக்கும் இஸ்ரேலின் திட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் பின்னணியில் அவர் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஈரான் மீதான தாக்குதலில்
அமெரிக்கா இணையுமா? என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த
டொனால்ட் ட்ரம்ப், 'நான் அதைச் செய்யலாம், நான் செய்யாமலும் இருக்கலாம்'
என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஈரானைத் தாக்குவது தொடர்பான இறுதி முடிவை அமெரிக்கா இன்னும் எட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், இஸ்ரேலிய தாக்குதல்களில்
அமெரிக்கா இணையுமாயின் 'சரி செய்ய முடியாத தீங்கு ஏற்படும்' என்று ஈரான்
உயர் தலைவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேல் - ஈரான் போர்
வலுவடைந்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசர
கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.





