ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி கொமேனியை கொலை செய்யும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி கொமேனியை கொலை செய்யும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கிய பின்னர் நடந்ததாகக் கூறப்படும் ஒரு உரையாடலில், கொமேனியை படுகொலை செய்வது நல்ல யோசனையல்ல என்று டொனால்ட் ட்ரம்ப், நெதன்யாகுவிடம் கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
எனினும் இந்த அறிக்கை குறித்து ட்ரம்ப் பகிரங்கமாகக் கருத்து தெரிவிக்கவில்லை. 
 
இதேவேளை, இந்த அறிக்கையை நெதன்யாகு நேரடியாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. 
 
ஒருபோதும் நடக்காத உரையாடல்கள் குறித்து பல தவறான தகவல்கள் உள்ளன, எனினும் அதில் ஈடுபடப் போவதில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் கூறியுள்ளார். 
 
தாம் செய்ய வேண்டியதைச் செய்வதாகவும், அமெரிக்காவிற்கு எது நல்லது என்று அமெரிக்காவுக்குத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.