மட்டக்களப்பு நொச்சிமுனை சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் S.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் 2025.06.16.அன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி கலாசார அரங்கில் வியட்நாமில் நடைபெற இருக்கும் 23-வயதுக்கு உட்பட்ட ஆசிய மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி சார்பில் பங்கேற்க இருக்கும் மட்டக்களப்பு வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது .
கௌரவிப்பு நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் , மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் குகதாசன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர் .
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு முன்னாள் மாநகரசபை முதல்வர் T.சரவணபவன் ,மாநகரசபை உறுப்பினர்கள் ,உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், அதிபர்கள் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
கடந்த 14.5.2025 விளையாட்டு அமைச்சின் உள்ளக அரங்கில் நடைபெற்ற தெரிவு போட்டியில் சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர்களாகிய சிவகுமார் கௌதம், ரெல்சன் ருகேஷ்நாத் ஆகிய இருவரும் முதலிடம் பெற்று தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் .
ஆரம்ப நிகழ்வாக 23-வயதுக்கு உட்பட்ட ஆசிய மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி சார்பில் வியட்நாம் செல்ல இருக்கும் மட்டக்களப்பு வீரர்களான சிவகுமார் கௌதம், ரெல்சன் ருகேஷ்நாத் ஆகிய இருவருக்கும் கௌரவ அதிதிகளால் சான்றிதழ்கள் மற்றும் நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கபட்டனர் .
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம் பெற்ற மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிக்கு ஆண்கள் அணியில் தெரிவாகிய 18.வீரர்களுக்கும் , பெண்கள் அணியில் தேசிய மட்ட மல்யுத்த போட்டிக்கு தெரிவாகிய 06. வீராங்கனைகளுக்கும் இன்றைய தினம் அதிதிகளால் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் .
வியட்நாம் செல்ல இருக்கும் மட்டக்களப்பு வீரர்களுக்கான பூரண நிதி அனுசரணையை பெரியகல்லாற்றை சேர்ந்த கோபி கிருஷ்ணன் அவர்கள் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி சார்பில் ஆசிய மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவாகி வியட்நாம் செல்ல இருக்கும் ௦6 ( மட்டக்களப்பு 02.வீரர்கள் ) மல்யுத்த வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளராக மட்டக்களப்பை சேர்ந்த திருச்செல்வம் கடமையாற்றி இருந்தார் ..
FREELANCER





















































