ஈலோன் மஸ்க்கின் (Elon Musk) செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் விரைவில் இலங்கையில் சேவைகளை வழங்கவுள்ளது.
இந்தமாத இறுதியில் அந்த சேவை இலங்கையில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் நாடு முழுவதும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஏற்கனவே நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டார்லிங்கின் வருகை, அதிவேக
செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைப்பை வழங்குவதன் மூலம், இலங்கையின் தொலைதூர
மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இணைய அணுகல் கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.





