ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்க மல்வத்து மகா நாயக்க தேரரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ச சமீபத்தில் மல்வத்தை மகா தேரரை சந்தித்து, அத்தகைய
நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம்
அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன என பிரபல ஊடகவியலாளர் சனத் பாலசூர்ய எழுதி உள்ளார்..
தற்போதைய
ஜனாதிபதி அநுர திசாநாயக்க, மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர்
திப்போட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரின் வார்த்தைகளுக்கு ஒருவித
கீழ்ப்படிதலைக் காட்டுகிறார் என்ற அரசியல் வட்டாரத்தின் நம்பிக்கையின்
அடிப்படையில், மகிந்த மகாநாயக்க தேரரைச் சந்தித்துள்ளதாக அறியப்படுகிறது.
இருப்பினும், அந்தக் கூட்டத்தில் மகாநாயக்க தேரர் அந்தக் கோரிக்கையை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்
மல்வத்த மகாநாயக்கர் திப்போட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர்,
“ஜனாதிபதியே, கடந்த காலங்களில் ஊழல்வாதிகளைக் கைது செய்ய வேண்டும் என்று
வலியுறுத்தி வந்த நாங்கள், எங்கள் வாயைத் திறந்து ஜனாதிபதி அநுரவிடம் இதை
எப்படிச் சொல்ல முடியும்?” என்று கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
“கடந்த
காலத்தில் ஆட்சிக்கு வந்த அனைத்துத் தலைவர்களிடமும் ஊழல்வாதிகளுக்கு உரிய
தண்டனை வழங்குமாறு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம்..
ஆனால்
எத்தனை வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், யாரும் அதைச் செய்யவில்லை.
தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டின் பொது நிதியைக்
கொள்ளையடித்த ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும்
நாங்கள் கூறியிருந்தோம்.
அவர் ஜனாதிபதியான பிறகும், அவரைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தக் கருத்தை நாங்கள் வலியுறுத்தினோம்.
எனவே,
மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் ஷிரந்தி கைது செய்யக்கூடாது என்று
இப்போது எப்படி வாய் திறந்து கூற முடியும்?” என்று மல்வத்த மகாநாயக்கர்
முன்னாள் ஜனாதிபதியிடம் மேலும் கேள்வி எழுப்பியிருந்ததாக
தெரிவிக்கப்படுகிறது.