உலக நாடுகள் பல ஈரான் மற்றும் இஸ்ரேலில் வாழும் தமது குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்துள்ளன.
அதன்படி, குறிப்பிடப்பட்ட நாடுகளின்
குடிமக்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவும் தனது குடிமக்களை ஈரான் தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேறுமாறு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் ஈரானிலிருந்து இந்தியர்கள் தற்போது ஆர்மீனியா எல்லை வழியாக வெளியேறி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.





