கடந்த வெள்ளிக்கிழமையுடன் 
ஒப்பிடுகையில், இன்று (30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் 
பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. 
இலங்கை மத்திய வங்கி இன்று (30) 
வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் 
கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 83 சதம், விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 15 
சதம். 
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 404 ரூபாய் 43 சதம், விற்பனைப் பெறுமதி 418 ரூபாய் 69 சதம். 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபாய் 28 சதம், விற்பனைப் பெறுமதி 358 ரூபாய் 12 சதம். 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபாய் 37 சதம், விற்பனைப் பெறுமதி 383 ரூபாய் 95 சதம். 
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 87 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 76 சதம். 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 14 சதம், விற்பனைப் பெறுமதி 200 ரூபாய் 94 சதம். 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபாய் 28 சதம், விற்பனைப் பெறுமதி 240 ரூபாய் 35 சதம். 
 

 
 




 
 
 
 
.jpeg) 
.jpeg)