அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் இன்று பதவியேற்றார். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரி.எல். அப்துல் மனாப் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அவர், மாநகர சபை ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களிடம் ஆவணங்களைப் பெற்று, மேயர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றார்.
இந்த நிகழ்வு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது.