ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வரவுள்ளார்.

 


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
இதன்படி, அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
2016ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஒருவர் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற்தடவையாகும். 
 
இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அத்துடன், வெளிநாட்டு அமைச்சர், சுற்றுலா அமைச்சர் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விஜயத்தின் மற்றுமொரு பகுதியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் புனித தலதா மாளிகை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் பயணிக்கவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.