இந்தியாவின், ஒடிசாவில் 
உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை 
ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் 
மேற்பட்டோர் காயமடைந்தனர். 
உயிரிழந்தவர்களில் 2 பெண்களும், 70 வயதுடைய ஆணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமாகி, 
எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த வருடாந்திர விழாவின் 
மூன்றாவது நாளில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. 
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை 
கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
           

 
 




 
 
 
 
.jpeg) 
.jpeg)