வடக்கு- கிழக்கில் 35 வது தியாகிகள் தினம் இன்று (19) வியாழக்கிழமை அனுஷ்ட்டிக்கப்படுகிறது
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபா உள்ளிட்ட உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.
அதனை முன்னிட்டு
மோகன் - கணேஸ்" ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்று போட்டி காரைதீவில் நடைபெற்றுவந்தது.
காரைதீவு
விவேகானந்த விளையாட்டுக் கழகம் தனது 38 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு
பெருமையுடன் நடாத்தும் "மோகன் கணேஷ்" ஞாபகார்த்த தியாகிகள் தினம் (யூன்
19) உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப தொடர் காரைதீவு விபுலானந்த
மத்திய கல்லூரி
மைதானத்தில் கடந்த 08/06/2025 அன்று சிறப்பாக இடம்பெற்றது.
இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 8 அணிகள் கலந்து இருந்தன.
தொடர்ந்து இச்சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இன்று 19/06/2025 அன்று சிறப்பாக இடம்பெறவிருக்கிறது.
வருடா வருடம் நடைபெறும் இப்போட்டிக்கு புலம்பெயர் வாழ் தோழர்கள் அனுசரணை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)






