நாடு முழுவதும் 26,775 டெங்கு நோயாளர்கள், ஒரு குழந்தை உட்பட 14 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன

 


எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை காரணமாக நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்த இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகரும், சமூக வைத்திய நிபுணருமான பிரஷிலா சமரவீர தெரிவித்தார். 

நாடு முழுவதும் 26,775 டெங்கு நோயாளர்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 14 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. 

45 வீதமான நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

மேல், கிழக்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.