.jpeg)
திருகோணாமலை நெக்கசா உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் ஆண், பெண் இருபாலாருக்குமான தைகொண்டோ போட்டி இடம் பெற்றது.
மாவட்ட மட்டத்தில் தெரிவாகி இருந்த அணிகள் மாகாண மட்ட போட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வகையில் முதலாம் இடத்தை 9 தங்கப்பதக்கங்கள் பெற்று மட்டக்களப்பு வீரர்களும் இரண்டாவது இடத்தையும் 05 தங்கப் பதக்கங்களை பெற்று திருகோணமலை வீரர்களும் மற்றும் மூன்றாவது இடத்தை
03 தங்க பதக்கங்களை பெற்று அம்பாறை வீரர்கள்
பெற்றுக்கொண்டனர்
ஆண்கள்,பெண்கள் பிரிவில் முதலாம்,இரண்டாம் இடத்தினை பெற்ற வீரர்கள்
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்ற உள்ளனர்.
திருகோணமலை விளையாட்டு திணைக்கள உத்தியோகஸ்தர்
கே. விமல்சனை
தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய அங்கத்துவம் உடைய தைகொண்டோ
நடுவர்கள் மத்தியஸ்தம் வகித்தனர்.
NIROJAN



.jpeg)
.jpeg)
.jpeg)






