கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், சுயம்புலிங்கப்பிள்ளையார் என்ற பெருமையினையும் கொண்டதுமான மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 23.06.2025 அன்று திங்கள் கிழமை ஆரம்பமாக உள்ளது .
ஆலய பிரதமகுரு சிவசிறி வி.கு.சிறிஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் பூஜை மற்றும் கிரிஜை நிகழ்வுகள் இடம்பெற உள்ளது .
2025.06.23அன்று கிரியைகளுடன் ஆரம்பமாகி, கும்பபூஜை, யாகபூஜை விசேட அபிசேகம் என்பன நடை பெற உள்ளன
இலங்கையில் மிகவும் பண்டைய ஆலயங்களுள் ஒன்றென்ற பெருமையினைக் கொண்ட களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா பத்து தினங்கள் நடைபெற்று எதிர்வரும் 02.07.2025 புதன் கிழமை மு.ப.9 மணிக்கு ஆணி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சுயம்புலிங்கப்பிள்ளையார், சிவன், முருகப் பெருமான் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெறுவதுடன் , உள்வீதி மற்றும் வெளிவீதியுலாவும் இடம் பெற இருக்கின்றன
பக்த அடியார்கள் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தில் கலந்து கொண்டு விநாயகப்பெருமானின் திருவருளை பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் பணிவன்புடன் அழைக்கின்றனர் .
FREELANCER