தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் (AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு, பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்ப்போர் கூடத்தில் இன்று(18) இடம்பெற்றது.
“முன்னேற்றம் பெறும் சந்தைகளில் தொழில்நுட்பத் தொழில் முனைவோர்; சுறுசுறுப்பின் மூலம் நிறுவன மாற்றம்” (“Technopreneurship in Emerging Markets; Organizational Transformation through Agitity”) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த சர்வதேச ஆய்வரங்கில்
உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். எம். ஜுனைடீன் உரையாற்றியதுடன் ஆய்வு மாநாட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வாளர்களின் ஆய்வு கட்டுரைகளின் சுருக்கங்களை உள்ளடக்கிய சுருக்கக்கோவை நூல் (Book of Abstracts) ஐயும் வெளியிட்டு வைத்தார்.
(AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டில் 136 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.





