இந்தியா - தெலுங்கானா
பகுதியில் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்குண்டு 10
தொழிலாளர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது பணியில் இருந்த தொழிலாளர்கள் துாக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாகவும், ஏராளமான தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் தப்பிபோடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் இதுவரை
கண்டறியப்படாத நிலையில் அந்த மாநில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.