ஈரான் இராணுவ தளபதிகள் உடல் அடக்கம் – இறுதி ஊர்வலத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவத் தளபதிகள் மற்றும் அணுசக்தி நிலைய விஞ்ஞானிகளுக்கு நடத்தப்பட்ட இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் .
தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி, வான் படைத் தளபதி அமீர் அலி ஹாஜிசாதே மற்றும் மேஜர் ஜெனரல் கோலாமலி ரஷித் ஆகியோர் உருவப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆதரவாளர்கள் ஊர்வலத்தில் சென்றனர்.
இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கும் நோக்கில், குறிப்பாக இராணுவத் தளபதிகள், விஞ்ஞானிகள் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து ஒரு போரைத் தொடங்கியது.
இறுதி ஊர்வலத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன