குளவிக்கொட்டுக்கு இலக்கான 08 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் !

 

 


பொகவந்தலாவை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 08 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

 
பொகவந்தலாவை – கெக்கர்ஸ்ட்வோல்ட் பெருந்தோட்டப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களே இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 
 
இந்த சம்பவத்தில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் 7 பேர் வீடுதிரும்பியுள்ளனர்.
 
இந்தநிலையில், ஏனைய 8 பேரும் பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.