மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, மற்றும் பட்டிருப்பு பிரதேசங்களில் இயங்கி வரும் பின்தங்கிய பாடசாலைகளான மட்/பட்/ மண்டூர் -38 அகத்தியர் வித்தியாலயம் , மட்/பட்/ வம்மியடியூற்று வாணி வித்தியாலயம் , மட்/பட்/ திக்கோடை கணேஷ மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு , பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் பொன்மணி அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையில் அப்பியாச கொப்பிகள்,மற்றும் உபகரணங்கள் பயிற்சி புத்தங்கள், சாதாரண தர மாணவர்களுக்கு மாதிரி வினா தாள்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பொன்மணி அமைப்பின் பொறுப்பாளர் வி. துர்க்கா அவர்களின் தலைமையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன .
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பொன்மணி அறக்கட்டளையின் பணிப்பாளர் முத்துக்குமார்அவர்களின் பூரண அனுசரணையிலும் லண்டனில் வசிக்கும் கந்தசாமி அவர்களின் ஒழுங்கு படுத்துதலின் பேரில் இவ் உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது .
FREELANCER