கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரனையில் இயங்கும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகளின் கண்காட்சியும் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வாழைச்சேனை 206D மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீஸா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களப்பணிப்பாளர் கே.இளங்குமுதன், கெளரவ அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.கோகுலராஜன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட தையல் போதனாசிரியை திருமதி என்.ரவிச்சந்திரன், கிராம சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றம்ளான், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பஸீஹா முஜீப், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எப்.முஜீபா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி யஸோதா சுபாஸ்கரன் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் எம்.எச்.நியாஸ் நிருவாக உறுப்பினர்கள், தையல் பயிற்சி ஆசிரியை மற்றும் பயிற்சி பெற்ற மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர்.
பயிற்சியை நிறைவு செய்த மாணவிகளுக்கு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளைக் கெளரவித்து மாணவிகளால் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. .
ந குகதர்சன்