சர்வதேச நீதியிலான யோகா போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக மட்டக்களப்பில் இருந்து செல்லவுள்ள குழு வென்று நேற்று (02) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களை சந்தித்து சென்றுள்ளனர்.
மட்டக்களப்பிலுள்ள ஐஸ்வரிய யோகா கலை மன்றம் மற்றும், ஐஸ்வரிய யோகா நிலையம் ஆகிய இரு அமைப்புக்களிலிருந்தும் 20 க்கும் மேற்பட்ட போட்டியாளர் இந்தியாவின் பெங்களூரில் எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை நடை பெறவுள்ள சர்வதேச போட்டியில் பங்குபெறவுள்ளனர்.
இப் போட்டியில் கலந்து கொள்ளும் குழுவினர் யோகா பயிற்சி அமைப்புக்களின் தலைவர்களான ஏ.ஜெயகரன், எஸ்.சிறிதரன் ஆகியோரின் தலைமையில் இந்தியா செல்லவுள்ளனர்.
இதன் போது அரசாங்க அதிபர் போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்





