மட்டக்களப்பு தேவபுரம் புகையிரத நிலையத்தில் கொழும்பு-மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு - கொழும்பு ரயில்களை நிறுத்துவதற்கு அமைச்சர் அருண் ஹேமசந்திரா அதிரடி நடவடிக்கை .

                                         






 

 மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை தேவாபுரம் புகையிரத நிலையத்தில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு  கொழும்பு-மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு-கொழும்பு சேவையிலுள்ள ரயில்கள் இன்றிலிருந்து
நிறுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை தேவாபுரம் புகையிரத நிலையத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொழும்பு-மட்டக்களப்பு, மட்டக்களப்பு-கொழும்பு சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை.
இதனால் வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் போன்ற புகையிரத நிலையங்களில் இறங்கி வீட்டுக்கு வந்து சேர அதிகம் பணம் செலவாகிறது.

இரவு நேரம் கொழும்பிலிருந்து வரும் போது நடு நிசியில் வீதிகளில் அலைய வேண்டியுள்ளது.
கொழும்புக்கு பயணம் செய்வதற்கும் அவ்வாறே நீண்ட தூரம் பயணித்து வேறு ரயில் நிறுத்தங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

ஆகவே தேவபுரம் புகையிரத நிலையத்தில் கொழும்பு-மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு - கொழும்பு ரயில்களை நிறுத்திக்கொடுக்கும்படி பொதுமக்களிடமிருந்து ஓர் கோரிக்கை கடந்த வாரம் கிடைக்கப்பெற்றது.

உடனடியாகக் குறித்த விடயத்தை மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சருமான அருண் கேமச்சந்திரா  அவர்களின் கவனத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் க.திலீப்குமார் கொண்டு சென்றிருந்தார்.

அதன்பிரகாரம் தேவபுரத்திற்கு அமைச்சர் அருண் ஹேமசந்திரா கள விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில அவர்கள் நிலைமையினை நேரடியாகவே வந்து ஆராய்ந்திருந்தார்.

அடுத்த கட்டமாக  தேவாபுரம் புகையிரத நிலையத்தில்  கொழும்பு-மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு-கொழும்பு சேவையிலுள்ள ரயில்கள் இன்றிலிருந்து
நிறுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 ந குகதர்சன்