வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீட்டுக் கூரையில் விழுந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் மாவனெல்லையில் இடம்பெற்றுள்ளது.
அரநாயக்க-மாவனெல்ல வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி சாண்ட்மன்னா வளைவில் திரும்பும் போது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின் கூரையின் மேல் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.