பேத்தாழை பொது நூலகம் விபுலாநந்தர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 60வது நிலா முற்றம்.

 

 
 
 
 
 

 

 



 
 

 








மு.கோகிலதாசன்



பேத்தாழை பொது நூலகம் விபுலாநந்தர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 60வது நிலா முற்றம் 01/02 நேற்று இரவு இடம்பெற்றது.
அதிதிகள் வரவேற்பைத் தொடர்ந்து அகவணக்கம், மங்கல விளக்கேற்றல் விபுலானந்தரின் படத்திற்கு மலர்மாலை அனிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் நூலக கீதம் இசைக்கப்பட்டு 60வது நிலா முற்றம் கலை நிகழ்வுகள் ஆரம்பமானது
கடந்த ஐந்து வருடங்களாக மாதந்தோறும் வருகின்ற ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நூலக முற்றத்தில் எழுத்தாளர்கள் படைப்பாளிகளின் படைப்புகளை அறிமுகம் செய்வதுடன் நூல்கள் பற்றிய உரையாடல்கள், விமர்சனங்கள் , நூல்வெளியீடுகள் போன்றவை இடம்பெறுவதுடன் இசை, நடனம் போன்ற கலை நிகழ்வுகளையும் அரங்கேற்றி வருகின்றது நிலா முற்றம்.
இவ் 60 ஆவது நிலா சாதனையாளர்கள் படைப்பாளிகள் மற்றும் மாதந்தோறும் நடைபெற்ற நிலா முற்றத்தில் கலந்து கொண்டு திறமைகளை வெளிக்காட்டிய கலைஞர்கள் படைப்பாளிகள் எழுத்தாளர்கள் போன்றோருக்கான நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வரவேற்பு நடனம் சிறுவர்களின் பாடலுக்கான அபிநய நடனங்களும் இடம்பெற்றது .
பேத்தாழை நூலக பொறுப்பாளர் திருமதி பு. தயாளன் மற்றும் விபுலாநந்த வாசகர் வட்ட தலைவர் ம.பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மண்முனை தென் மேற்கு உதவி பிரதேச செயலாளர் சூ. பார்த்திபன் , பிரதேச சபை ந. நிமல்ராஜ் கோறளைப்பற்று பிரதேசபை செயலாளர் எஸ். ராஜ்கீதன் மற்றும் சனசமுக நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் அ. ஹாருன், பாடசாலை அதிபர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர், எழுத்தாளர்கள் ,படைப்பாளிகள், கலைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்..