புளியந்தீவு சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான கொடியேற்ற நிகழ்வு பக்தி பூர்வமாக இடம்பெற்றது

 

 

 

 

 

 







கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான புளியந்தீவு சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான கொடியேற்ற நிகழ்வு நேற்று  மதியம் சுப நேரத்தில் அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது

 கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்து வரப்பட்டு அதன் பின்பு நேற்று  காலை சித்தி விக்னேஸ்வர பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம் பெற்றதன் பின்பு கொடி மரத்தின்  அருகே எம்பெருமான் எழுந்தருள பண்ணி அந்தணர்களின்  வேத பாராயண முழங்க தேவஸ்தானத்தில் பிரதம குரு சிவஸ்ரீ கணேச   திவி சாந்த குருக்கள் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு இடம் பெற்றது

புளியந்தீவு சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு திருவிழாவான  தேர் திருவிழா  எதிர் வரும் 11.05.2025 அன்று இடம்பெற உள்ளத்துடன் திரு வேட்டை திருவிழா 10.05.2025 அன்று  மாலை இடம்பெற உள்ளது

 ஆலயத்தின் தீர்த்த திருவிழாவானது 12.05.2025 அன்று மட்டு மாமாங்க ஆலய தீர்த்தக்   கரையில் நண்பகள் இடம்பெற உள்ளது

 இதேவேளை இன்றைய கொடியேற்ற நிகழ்வில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து அதிகளவிலான  பக்த அடியார்கள் கலந்து  கொண்டனர்.
 வரதன்