கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

 


யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை, தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று பிற்பகல் 4 மணியளவில் தும்பளை கிழக்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடையவரே கடலில் மூழ்கிய நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் அருகிலுள்ளவர்களால் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.