வலயமட்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில் சிவாநந்த வித்தியாலயம் வெற்றி வாகை சூடியது, புனித மிக்கல்கல்லூரிக்கு எதிரான இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிவாநந்த வித்தியாலயம் 8 ஓவர்களுக்கு 2 விக்கட் இழப்பிற்கு 127 ஓட்டத்தினை பெற்றனர் . நிருகாஷ் 88 ஓட்டத்தினை பெற்றார். பதிலெடுத்தாடிய புனித மிக்கல் கல்லூரி அணியினர் 8 ஓவர் முடிவில் 6 விக்கட்களை இழந்து 54 ஓட்டங்களை பெற்றனர். இதன் மூலம் சிவாநந்த வித்தியாலய அணியினர் 73 ஓட்டங்களால் வெற்றிபெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மென்பந்து Cricket போட்டியில் சிவாநந்த வித்தியாலய அணியினர் வெற்றிபெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த முறை சிவானந்த வித்தியாலய கடினபந்து அணியினர் மாகாண மட்ட போட்டியில் வெற்றிபெற்று தேசியமட்ட போட்டியில் அரையிறுதி வரை சென்றியிருந்தனர் .