கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உட்பட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உட்பட ஒன்பது பேர் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டனர்.