தங்கப்பதக்கங்களை வென்று மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்தார் செல்வன் குளோரியன் ஹேமேந்திரா.









தேசிய பராஒலிம்பிக் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான
மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் குண்டெறிதல் மற்றும் பரிதிவட்டம் வீசுதல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வன் குளோரியன் ஹேமேந்திரா அவர்கள் தேசிய ரீதியில் இரு தங்கப்பதக்கங்களை வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். இம்மாதம் 17ஆம், 18ஆம் திகதிகளில் கோமாகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் இப்போட்டிகள் இடம்பெற்றன.
இவா் 2022, 2024 ஆம்  ஆண்டு நடைபெற்ற மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் குண்டெறிதலில் தேசிய ரீதியில் பதக்கத்தை பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது. சிறு வயது முதல் விளையாட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் 18 வயதான செல்வன் குளோரியன் ஹேமேந்திரா நீச்சல், கூடைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளிலும் திறமை பெற்றவர் என்பதுடன் விளையாட்டுத்துறையில் பல்வேறு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.