வவுனியா மாநகர சபையில் தமிழரசுக் கட்சி ஒரு வட்டாரத்தில் கூட வெற்றி பெறாது பின்னடைவைச் சந்தித்தது தமிழ் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது .

 


நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வவுனியா மாநகர சபையில்  ஒரு வட்டாரத்தில் கூட வெற்றி பெறாது பின்னடைவைச் சந்தித்துள்ளது.

வடக்கு - கிழக்கு உள்ளிட்ட தமிழ் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியை பின்தள்ளி இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

எனினும் வடக்கின் நுழைவாயிலாக விளங்கும் வவுனியா மாநகர சபையில் கடந்த முறை தமிழரசுக் கட்சி 6 உறுப்பினர்களை கொண்டிருந்த போதும் இம்முறை ஒரு வட்டாரத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கை தொழிலாளர் கட்சி என்பன தலா நான்கு ஆசனங்களைப் பெற்று வட்டாரங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

இலங்க தமிழரசுக் கட்சி விகிதாசார அடிப்படையில் போனஸ் ஆசனம் மூன்றினை வவுனியா மாநகர சபையில் பெற்றுள்ளது.