முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்களின் கோட்டையான மெதமுலன தேர்தல் தொகுதி, 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் விழுந்தது.
வீரக்கெட்டிய பிரதேச சபைக்குரிய மெதமுலன தேர்தல் தொகுதியில் 1115 வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 768 வாக்குகளை பெற்றது.
அரசியலில் மெதமுலன அதிகாரத்தை ராஜபக்ஷர்களை வைத்திருந்தனர். எனினும், இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அந்த அதிகாரம் இல்லாமல் போய்விட்டது.