மட்டக்களப்பு முகத்துவாரம் ஆழ் கடலில் ஞாயிற்றுக்கிழமை (04) காலை இராட்சத யானைத்திருக்கை மீன் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட மீன் கரைக்கு இழுத்து வர முடியாமல் நீண்ட நேரமாக மீனவர்கள் கடும் சிரத்தைப்படாடதை அவதானிக்க முடிந்தது.
இவ் யானைத் திருக்கை மீனின் எடை 300 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் என தெரிவிக்கப்படுகின்றது.