லண்டன் சர்வதேச நுண்கலை தேர்வு ஆணையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சிவானந்தா வித்யாலய கலாச்சார மண்டபத்தில் ஆற்றுகை நிகழ்வு .



 

     












 

 

 





 
























 

லண்டன்  கிரிஃபின் கல்லூரி  சர்வதேச நுண்கலை தேர்வு ஆணையமும் ,மட்டக்களப்பு திருமதி சசிகலாராணி ஜெயராம்  அவர்களின் கலார்ப்பனா  பரத நாட்டிய கலைக்கூட மாணவிகளான செல்வி துளசிதாசன் ஹிமர்த்திகா , சிவகோணேஸ்வரன் விகாஷினி ,கமலநாதன் கமலாக்ஷினி மற்றும் குமாரசிங்கம் அங்கவி ஆகிய  மாணவிகள்  இணைந்து   மட்டக்களப்பு  சிவானந்தா   வித்யாலய  கலாச்சார மண்டபத்தில்  "ஆற்றுகை" நிகழ்வை பெருமையுடன் முன்னெடுத்திருந்தார்கள் .

ஆற்றுகை நிகழ்வுக்கு பிரதான அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயப்பணிப்பாளர் திருமதி ஷாமினி ரவிராஜ் அவர்களும்  சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்களும்  கலந்து கொண்டனர் .
கலார்ப்பனா  பரத நாட்டிய கலைக்கூட  நிறுவனர்  திருமதி  சசிகலாராணி ஜெயராம் அவர்களின் நெறியாள்கையில் ஆற்றுகை நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றது.
 பெற்றோர்கள் ஆசியுரை வழங்க , இறை வழிபாட்டுடன் ஆற்றுகை ஆரம்பமானது .
திருமதி  சசிகலாராணி ஜெயராம்  அவர்களின்  கலார்ப்பனா  பரத நாட்டிய கலைக்கூட  மாணவிகள்  நால்வர்  ஆற்றுகையை  மிக சிறப்பாக அரங்கேற்றிருந்தார்கள்  .
நிகழ்வின்  முடிவில் மாணவிகளுக்கும் , பங்கு பற்றிய கலைஞர்களுக்கும்  , கலை ஆர்வலர்களாலும் ,பெற்றோகளாலும் பொன்னாடை போர்த்தப்பட்டு  நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

FREELANCER