பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதை விடுத்து உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் மீண்டும் பாரியதொரு மின் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று பல மாதங்களுக்கு முன்னரே நாம் தெரிவித்திருந்தோம்.
மின் சக்தி அமைச்சர் உட்பட முழு அரசாங்கமும் அதனை மறுத்தது. ஆனால் கடந்த வாரம் 18.3 சதவீதத்தினால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை மின்சாரசபையால் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நெக்ஸ் ஆடை தொழிற்சாலை மூடப்பட்டது. இந்நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் இதேபோன்று இன்னும் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்படும்?
விரைவில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த சவால்களுக்கு அரசாங்க தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை