பட்டா(batta) வாகனத்தில் கொண்டு சென்ற ஒரு தொகுதி அரிசிமூட்டைகள், உடன் விரைந்த தேல்தல் அதிகாரிகளும் பொலிசாரும்.




மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதான வீதியில் பட்டா(batta)  ரக வாகனத்தில் ஒருதொகுதி அரிமூடைகள் கொண்டு செல்லப்படுவதாகவும், அது தேர்தலுக்காக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்காக இருக்கலாம் என தேர்தல் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய உடன் விரைந்து செற்பட்ட தேல்தல் திணைக்கள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை(04.05.2025) இரவு உரிய வாகனத்தை அவதானித்துள்ளனர்.

பின்னர் அசிரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தையும், உரிய சாரதியையும் அழைத்துக் கொண்டு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தலா 5 கிலோ எடையுள்ள 250 அரிசி மூட்டைகளை ஏறாவூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி பிரதேசத்தின் கல்லாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கல்லாறு பகுதியிலிருந்து ஒருவர் வாகனத்தின் சாரதி உரிய நபருக்கு தொலைபேசி அழைப்பெடுத்துள்ளார். அவர் வருவதற்கு காலதாமதமான நிலையில்  உரிய வாகனத்தின் சாரதி கல்லாறு பகுதியிலிருந்து மீண்டும் ஏறாவூர் பகுதி நோக்கி திரும்பிச் செல்லும் வழியிலேயே அவர் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்டு பொலிசாரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளளார்