உலகின் முதல் தமிழ் பேராசிரியரும் முத்தமிழ் வித்தகரும் சிவாநந்த வித்தியாலய ஸ்தாபகருமான சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133வது ஜனன தினத்தை முன்னிட்டு கிழக்கில் பல இடங்களில் ஜனன தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன .
இன்று காலை மட்டக்களப்பு கல்லடி-உப்போடை விபுலாநந்த மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அடிகளாரின் சமாதியில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம் பெற்றது .
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் அமையப்பெற்ற நீரூற்று பூங்கா விபுலாநந்த அடிகளாரின் திருஉருவச் சிலைக்கு மாநகர ஆணையாளர் M.தனஞ்ஜெயன் மலரஞ்சலி செலுத்தினார் .
இவ் நிகழ்வின் போது
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன் , உப தலைவர் திருமதி திலகவதி ஹரிதாஸ்
பொதுச்செயலாளர் ச.ஜெயராஜா , மற்றும் பொருளாளர் த.யுவராஜன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.