மட்டக்களப்பில் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133வது ஜனன தின நிகழ்வு -2025.05.03

 

























சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133வது ஜனன தின நிகழ்வு இன்று 2025.05.௦3 மட்டக்களப்பு  கல்லடி-உப்போடை விபுலாநந்த மணி மண்டப  வளாகத்தில் உள்ள    அடிகளாரின் சமாதியில் இடம் பெற்றது .
ராமகிருஷ்ண மிஷன் துறவியும் முத்தமிழ்  வித்தகரும் சிவாநந்த வித்தியாலய ஸ்தாபகருமான சுவாமி விபுலாநந்தரின் 133வது பிறந்த தினத்தை முன்னிட்டு கல்லடி-உப்போடை விபுலாநந்த மணி மண்டபத்திலுள்ள அடிகளாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு 2025.05.03ந் திகதி சனிக்கிழமை காலை  7.30 மணியளவில்  ராம கிருஷ்ணமிஷன் பொது மேலாளர் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் தலைமையில் இடம் பெற்றது .
ஏராளமான விபுலாநந்த பக்தர்கள் , கல்விமான்கள் ,மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள்  அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டார்கள் .